ரிசப் பண்டிற்கு பிசிசிஐ கொடுத்த புதிய அங்கீகாரம்! தோனிக்கு அடுத்து இவர் தான்

ரிசப் பண்டிற்கு பிசிசிஐ கொடுத்த புதிய அங்கீகாரம்! தோனிக்கு அடுத்து இவர் தான்


rishap-pant-listed-in-a-category

இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணிக்கான வீரர்களை வெவ்வேறு வகைகளில் பிரிப்பது வழக்கம். அதற்கு ஏற்றார்போல் அவர்களது சம்பளம் நிச்சயிக்கப்படும். அந்த வகையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் ரிசப் பண்ட் 5 கோடி சம்பளத்துடன் A  பிரிவில் இடம்பிடித்துள்ளார். 

37 வயதான தோனி 2004 ஆம் ஆண்டு முதல் 15ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி வரும் உலககோப்பைத் தொடருடன் ஒருநாள் மற்றும் T20 போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவார் என அனைவராலும் கனிக்கப்படுகிறது. 

cricket

இந்நிலையில் தோனியின் இடத்தை நிரப்ப இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு விக்கெட் கீப்பர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனைகளில் அனைவரின் மனதிலும் ஆணித்தரமாக இடம்பிடித்து இன்று ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்குமான இந்திய அணியில் இடம்பிடித்து இருப்பவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிசப் பண்ட். 

இவர் கடந்த ஐபிஎல் போட்டியில் தனது வித்தியாசமான பேட்டிங் நுணுக்கத்தால் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் பார்வையில் தோனிக்கு அடுத்து இவர் தான் என பதியும் அளவிற்கு தன் திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல் தன் திறமைக்கான சரியான அங்கீகாரத்தையும் இன்று ரிசப் பண்ட் பெற்றுள்ளார். 

cricket

அது என்னவெனில், இந்திய கிரிக்கெட் வீரர்களில் பட்டியலில் தோனி இடம்பிடித்துள்ள A பிரிவிலேயே ரிசப் பண்டும் இடம்பெற்றுளளார். இவருக்கு போட்டியாக கருதப்படும் தினேஷ் கார்த்திக் C பிரிவில் தான் இடம்பிடித்துள்ளார். இதனால் தோனிக்கு அடுத்து ரிசப் பண்ட் தான் என கிட்டத்தட்ட முடிவாகியுளள்து. இந்த பட்டியலானது A+,  A, B, C என வகைப்படுத்தப்படும். 

A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் கோலி, துனை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பும்ரா மட்டும் இடம்பிடித்துள்ளனர். A பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரஹானே, தோனி, தவான், சமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிசப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.