என்னங்க ஷாட் இது.? இப்டி ஒரு ஷாட்ட எந்த மேட்ச்லயும் பாத்தது இல்ல.. முன்னாள் வீரர்களை மிரளவைத்த ரிஷப் பண்ட்..

என்னங்க ஷாட் இது.? இப்டி ஒரு ஷாட்ட எந்த மேட்ச்லயும் பாத்தது இல்ல.. முன்னாள் வீரர்களை மிரளவைத்த ரிஷப் பண்ட்..



rishabh-pant-viral-reverse-sweep-shot-viral-video

இந்தியா - இங்கிலாந்து T20 போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் ஒன்று வேற லெவலில் வைரலாகிவருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் டி 20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தநிலையில் இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 125 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங்கிசெய்தபோது இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் ஒன்று வேற லெவலில் வைரலாகிவருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் அடித்த பண்ட், அதனை சிக்ஸராக மாற்றினார்.

கிட்டத்தட்ட 140 கி.மீ வேகத்திற்கும் மேலாக வந்த பந்தை ரிஷப் பண்ட் எந்த ஒரு பயமும் இன்றி ரிவர்ஸ் ஸ்கூப் முறையில் சிக்ஸராக மாற்றியதை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து பதிவிட்ட இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கிரிக்கெட் வரலாற்றில், மிகச் சிறந்த ஷாட் ஒன்றை பண்ட் அடித்துள்ளார் எனவும், இந்த புதிய தலைமுறை வீரர்கள் பயமே இல்லாமல் விளையாடுவதாக யுவராஜ் சிங்கும் பண்டை புகழ்ந்துள்ளனர். மேலும் வாசிம் ஜாஃபர், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.