விளையாட்டு

இவ்வளவு திமிர் ஆகாது.. அஸ்வினை முறைத்த ரியான் பராக்.! பரபரப்பு விமர்சனங்கள்.!

Summary:

இவ்வளவு திமிர் ஆகாது.. அஸ்வினை முறைத்த ரியான் பராக்.! பரபரப்பு விமர்சனங்கள்.!

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வின் - ரியான் பராக் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் ரியான் பராக்.

நேற்றைய ஆட்டத்தில் அஸ்வினும், ரியான் பராக்கும் களத்தில் நின்றனர். அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தை எதிர்கொள்ளும் போது பந்து பேட்டில் படால் ஓயிடாக வீசப்பட்டு, அது நேராக விக்கெட் கீப்பரடம் சென்றது. ஆனால் ரியான் பராக் அஸ்வினை கேட்காமல் ரன் ஓடி ஆட்டமிழந்தார்.

ஆனால் அஸ்வின் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், அப்படியே ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார். இதனால் ரியான் பாரக் ரன் அவுட் செய்யப்பட்டார். அஸ்வின் இப்படி செய்ததை பார்த்து ரியான் பராக் கடுப்பாகி சீறினார். அஸ்வினை பார்த்து ஏன் ஓடவில்லை என்பது போல சிக்னல் காட்டி கேள்வி எழுப்பினார். மேலும் மிக கோபமாக பெவிலியன் திரும்பி வந்தார்.

பெவிலியனில் ரியான் பராக் கோபமாக பேட்டை தரையில் அடித்தார். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  ஓட வாய்ப்பே இல்லாத இடத்தில் ரன் ஓடி தவறு செய்துவிட்டு, அஸ்வினை முறைப்பது எல்லாம் எந்த விதத்திலும் சரியே கிடையாது. ரியான் பராக் விராட் கோலியின் ரசிகர். இதனால் அவர் போல் நடப்பதாக நினைத்து கொண்டே வெறுப்பையே சம்பாதித்து கொள்கிறார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.


Advertisement