இந்தியா விளையாட்டு WC2019

ரோஹித் அடித்த சிக்சிரில், மைதானத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் மீது விழுந்த பந்து! இதனால் பெண்ணிற்கு கிடைத்த பரிசு!

Summary:

rhohit gave a gift for fan


நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. நேற்றைய தோவியால் பங்களாதேஷ் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்தது.

நேற்று நடந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதனையடுத்து துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா தனது 26 சதத்தை பதிவு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. 

பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 48 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

நேற்றைய ஆட்டத்தில் ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். அவர் அடித்த சிக்சர்களில் ஒரு சிக்சர் மீனா என்ற ரசிகை மீது  பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து போட்டி முடிவடைந்த பிறகு ரோகித் ரசிகை மீனாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கினார். 


 


Advertisement