விஜய் சங்கர் வெளியேற்றத்திற்கு பின்னால் இருக்கும் பகீர் பின்னணி! பிசிசிஐ விளக்கம்

விஜய் சங்கர் வெளியேற்றத்திற்கு பின்னால் இருக்கும் பகீர் பின்னணி! பிசிசிஐ விளக்கம்



Reasin behind rested vijay shankar

உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை காயம் காரணமாக பிசிசிஐ நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு சிக்கலுக்கு பிறகு உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். ஆரம்பத்தில் ஆடும் லெவனில் இடம் பெறாமல் இருந்த அவருக்கு ஷிகர் தவான் காயம் காரணமாக நீக்கப்பட்டதால் 3 போட்டிகளில் ஆடினார். மூன்று போட்டிகளிலும் அவருடைய பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

wc2019

இந்நிலையில் உலக கோப்பை அணியில் இருந்து விஜய்சங்கர் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

விஜய் சங்கர் நீக்கப்பட்டதை குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, " கடந்த ஜூன் 19ஆம் தேதி பயிற்சியின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசிய பந்து விஜய்சங்கரின் கால் கட்டை விரலில் அடித்தது. அப்போது அவரது கட்டைவிரலில் ஏற்பட்ட முறிவு இன்னும் சரியாகததால் அவரால் தொடர்ந்து ஆட முடியாது. எனவே உலக கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்படுகிறார்" என்று விளக்கம் அளித்துள்ளது.

wc2019

ஆனால் காலில் அடிபட்ட பிறகு ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது விஜய்சங்கர் அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவருக்கு 3 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.