கொல்கத்தா அணியின் மோசமான ஆட்டம்.! தட்டி தூக்கிய விராட் கோலி படை.!

கொல்கத்தா அணியின் மோசமான ஆட்டம்.! தட்டி தூக்கிய விராட் கோலி படை.!



rcb won kkr team

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற 39வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் திரிபாதி களமிறங்கினர். ஆனால் கொலகத்தா அணி 14 ரன்களில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

rcb

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக படிக்கல் மற்றும் பின்ச் களமிறங்கினர்.

பெங்களூரு அணியின் படிக்கல் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய பின்ச் 16 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய குர்கீரத் சிங்க் மன் 21 ரன்கள் எடுத்தநிலையிலும் விராட் கோலி 18 ரன்கள் எடுத்தநிலையிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர். இறுதியில் பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.