ஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ்.! கெத்து காட்டும் கோலி படை.! வேற லெவல் ஆட்டம்.!

ஆத்தாடி.. பேய் ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ்.! கெத்து காட்டும் கோலி படை.! வேற லெவல் ஆட்டம்.!


rcb playing very well

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 10-வது லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிவருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே விராட் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.  

rcb

டிவில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 205 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிவருகிறது.