விளையாட்டு

"கிரிக்கெட் விளையாடவே பிறந்தவன் அவன்..!" புகழ் மழையில் நனையும் பிரிதிவ் ஷா

Summary:

ravi sasthiri about prithiv sha

மும்பையைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் பிரிதிவ் ஷா. இந்தியா டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிரிதிவ் ஷா தான் விளையாடிய முதலாவது தொடரிலேயே தொடர் நாயகன் விருதினை பெற்றுள்ளார். இது சர்வதேச அளவில் அவரது திறமைக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம். 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று இன்னிங்சில் களமிறங்கிய பிரிதிவ் ஷா முதலாவது இன்னிங்சில் 134 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 70 மற்றும் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

முதலாவது தொடரிலேயே சிறப்பாக ஆடிய பிரிதிவ் ஷாவிற்கு பல ஜாம்பவான்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிரிதிவ் ஷாவை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் பிரிதிவ் ஷாவை கிரிக்கெட் உலகின் மூன்று ஜாம்பவான்களான சச்சின், சேவாக், லாரா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அவரைப் பற்றி மேலும் பேசிய ரவி சாஸ்திரி "பிரிதிவ் ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். இது போன்று பல யுக்திகளை பயன்படுத்தி விளையாடினால் அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

 


Advertisement