விளையாட்டு

ராஜஸ்தான் அணி அசத்தல்.. ஐபிஎல் போட்டிக்காக மைதானத்தில் மேலே இருந்து பைக்குடன் குதித்த நபர்.! வைரல் வீடியோ

Summary:

ராஜஸ்தான் அணி அசத்தல்.. ஐபிஎல் போட்டிக்காக மைதானத்தில் மேலே இருந்து பைக்குடன் குதித்த நபர்.! வைரல் வீடியோ

2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது. இந்தநிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து 2022 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு அணியும் வித்தியாசமான முறையில் தங்கள் அணி வீரர்கள் குறித்தும், ஜெர்சி பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறது. 


அந்த வகையில் ராஜஸ்தான் அணி அசத்தும் பைக் ஸ்டண்டை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக ரெட் புல் சாகச வீரர் ராபி மெடிசனை வைத்து  திரைப்பட பைக் ஸ்டண்டையே மிஞ்சும் அளவுக்கு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வீட்டின் சுவரில் பைக் ஓட்டுவது, சாலையில் வீலிங் செய்வது உள்ளிட்ட அசத்தல் காட்சிகள்இடம்பெற்றுள்ளன. இறுதியாக ராபி மெடிசன் மைதானத்தில் உச்சியில் இருந்து பைக் மூலம் கீழே குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த விடியோவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Advertisement