மீண்டும் பெய்யத் துவங்கியது கனமழை! 20 ஓவர் போட்டி நடைபெற வாய்ப்பு கிடைக்குமா?

மீண்டும் பெய்யத் துவங்கியது கனமழை! 20 ஓவர் போட்டி நடைபெற வாய்ப்பு கிடைக்குமா?


rain-started-again-heavily

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 18 ஆவது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் நடைபெறும் நாட்டிங்காம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணியும் 2 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணியும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியில் யாருக்கு வெற்றி தொடரும் யாருக்கு தோல்வி கிடைக்கப்போகிறது என ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

wc2019

5 மணி அளவில் கிடைத்த தகவலின்படி, ஆய்வு முடித்து பேசியுள்ள நடுவர்கள், மழை முற்றிலும் நின்றாலும் எல்லைக்கோடு பகுதிகளில் அதிகம் ஈரப்பதம் இருப்பதால் வீரர்களை ஆட வைப்பது சற்று சிரமம் தான். ஏனெனில் இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெயில் அதிகமாக வந்து மைதானத்தில் ஈரப்பதம் குறைந்தால் மட்டுமே ஆட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மீண்டும் அடுத்த ஆய்வு இந்திய நேரப்படி 6:30 மணிக்கு தெரியவரும் என அறிவித்தனர்.

ஆனால் இந்திய நேரப்படி சரியாக 6 மணிக்கெல்லாம் நாட்டிங்காமில் அதிகமாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. இன்று இதுவரை பெய்த மழையிலேயே இப்போதுதான் கன மழை பெய்து வருகிறது. இதனால் இனிமேல் ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான். இருந்தாலும் இந்திய நேரப்படி 8:45க்கு ஆட்டம் துவங்கினால் 20 ஓவர்கள் ஆட்டத்தினை நடத்த முடியும்.

wc2019

டக் ஒர்த் லூயிஸ் விதி முறையின்படி ஒரு ஆட்டத்தில் முடிவினை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தது 20 ஓவர்கள் ஆடி இருக்க வேண்டும். அப்படி ஆட முடியாவிட்டால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக கருதப்படும். எனவே இந்திய நேரப்படி 8:45க்குள் ஆட்டம் தூங்காவிட்டால் இந்த ஆட்டம் முற்றிலும் கைவிடப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும்.