கேப்டன் பதவியில் இருந்து ரஹானே அதிரடி நீக்கம்! புதிய கேப்டன் இவர்தானா?
கேப்டன் பதவியில் இருந்து ரஹானே அதிரடி நீக்கம்! புதிய கேப்டன் இவர்தானா?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அஜின்க்யா ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எழும் அவரே இந்த தொடர் முழுவதும் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் அணி நிர்வாகம் கூறுகையில், கடந்த ஆண்டு ரஹானே சிறப்பாக அணியை வழிநடத்தி, பிளே ஆப் சுற்று வரை கொண்டு சென்றார். ஆனால் தற்போது புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் ஆர்சிபி அணியுடன் கடைசி இடத்தை பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்பதற்காக இந்த புதிய மாற்றம் தேவைப்பட்டது என கூறியுள்ளது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் அணியை நன்கு அறிந்தவர் என்பதால் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்றும் கூறியுள்ளது.மேலும் மே1ம் தேதிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் இணைய உள்ளதால், அதன் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்பதால் மீண்டும் ரஹானே கேப்டனாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.