இந்தியா விளையாட்டு

பும்ராவின் பவுலிங் ஆக்ஷனை லோகோவாக வைத்த பிரபல ஐபிஎல் அணி! லோகோவை கிண்டலடித்த பும்ரா!

ஐபிஎல் அணிகளில் ஒரு முக்கியமான அணியான ஆர்.சி.பி. எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களை கொண்டிருந்தாலும் அந்த அணி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பையை வென்றதில்லை.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து முகப்பு படங்கள், லோகோ, பதிவுகள் ஆகியவற்றை நீக்கி புதிய லோகோவை கடந்த 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்த  புதிய லோகோவுக்கு ஆர்சிபி ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

View this post on Instagram

If you know, you know. #PlayBold #NewDecadeNewRCB

A post shared by Royal Challengers Bangalore (@royalchallengersbangalore) on

இந்த லோகோ மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த லோகோவை பார்த்த பும்ரா, இந்த லோகோ எனது பவுலிங் ஆக்‌ஷனை போலவே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். பும்ராவின் இந்தக் கிண்டல் கருத்தை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். அதேபோல் இது பும்ராவின் ஸ்டைல்தான் என கிரிக்கெட் ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement