"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்! அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் முடிந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது.
இந்த நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பும்ராவிற்கு முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, அவருக்கு ஏற்பட்ட காயம் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலாக களமிறங்கும் உமேஷ் யாதவ், கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.