விளையாட்டு

வைரலாகும் புஜாராவின் ரன் அவுட் வீடியோ! அப்படி என்ன தான் இருக்கு அதுல!

Summary:

Pujara run out video

விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள  இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அடிலெய்டில் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தடுமாறி இருவருமே கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது.

ஆனால் இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்த புஜாரா கம்மின்ஸின் சிறப்பான பீல்டிங்கால் ரன் அவுட்டானார். முதல் நாளின் கடைசி ஓவரில் புஜாரா மட் ஆன் திசையில் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் அங்கு நின்ற கம்மின்ஸ் பந்தை தடுத்து காற்றில் பறந்தவாறே வீசிய பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. 

இந்த சிறப்பான ரன் அவுட் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைவரும் கம்மின்ஸை பாராட்டி வருகின்றனர்.


Advertisement