
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைநகர் டெல்லியில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்காக உதவி கரம் நீட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில், ஆக்சிஜன் வாங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் (50 ஆயிரம் டாலர்) நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவுடனான எனது அன்பு கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் அடைந்து வருகிறது. இந்திய மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள்.
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துவருவதை அறிந்து கடும் துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன். மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் நடத்துவது தேவை தானா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.பி.எல். தொடர் மக்களின் வேதனையை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். என்னுடன் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனப்பாண்மையை அறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement