சச்சின் பந்துகளை எவ்வளவு தான் அதிரடியாக அடித்தாலும், அதை மட்டும் செய்யமாட்டார்! பாக்கிஸ்தான் வீரர் ஓப்பன் டாக்!

சச்சின் பந்துகளை எவ்வளவு தான் அதிரடியாக அடித்தாலும், அதை மட்டும் செய்யமாட்டார்! பாக்கிஸ்தான் வீரர் ஓப்பன் டாக்!


pakistan-player-talk-about-sachin

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அனைவரும் ஐபிஎல் நடக்கும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், கொரோனா எல்லோருடைய ஆசையிலும் மண்ணை அள்ளி போட்டது போல உலகத்தையே வீட்டிற்குள் முடக்கியது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமைந்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் விக்கெட் கீப்பருமான ரஷித் லத்தீப் சச்சின் தெண்டுல்கருக்கு எதிராக விளையாடிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

  sachin

அதில் ரஷித் லத்தீப் கூறுகையில், நான் கீப்பிங் செய்யும்பொழுது பல்வேறு வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் சச்சின் விளையாட வந்தால் மட்டும் அவர் அவுட் ஆகி வெளியேறக் கூடாது என எனது மனதில் தோன்றும். அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும் போது  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். தொலைக்காட்சியில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது இதுபோன்ற உணர்வு தோன்றியதில்லை. ஆனால் நான் அவர் பின்னால் நின்று கீப்பிங் செய்யும்பொழுது அவர் வெளியேறக்  கூடாது என என் மனம் ஏங்கும். 

சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் செய்யும்போது அவரது பின்னால் நின்று எது சொன்னாலும், அவரது முகத்தில் சிரிப்பு மட்டும் தான் வரும். மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் சச்சினும், முகமது அசாருதீனும் தான் வித்தியாசமானவர்கள். எதிரில் விளையாடும் வீரர்களின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள். அதனால் தான் சச்சினை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். சச்சின்  பந்துகளை அதிரடியாக அடிந்த்தாலும், வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார் என புகழ்ந்து பேசியுள்ளார்.