விளையாட்டு WC2019

நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி

Summary:

Pakistan given first defeat to Newzland

2019 ஐசிசி உலக கோப்பை தொடரில் 33வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானிடம் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வில்லியம்சன் மற்றும் நீசம் ஜோடி நிதானமாக ஆடினர். ஆனால் 27 ஆவது ஓவரில் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 83 மட்டுமே.

பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நீசம் மற்றும் கிராண்ட்ஹோம் இருவரும் அரைசதம் அடித்தனர். 47வது ஓவரில் கிராண்ட்கோம் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. நீசம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார்.

பின்னர் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சோகைல் சிறப்பாக ஆடி பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். 49வது ஓவரில் ஹாரிஸ் 68 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.  50 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாபர் அசாம் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தர்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை இந்திய அணி மட்டும் எந்த தோல்வியும் பெறாத ஒரே அணியாக இருந்து வருகிறது.


Advertisement