விளையாட்டு

முதல் T20: 10 ஓவர்கள் பவுண்டரியே அடிக்காத இந்தியா! கடைசியில் வெறுப்பேற்றிய தோனி

Summary:

No boundaries for 10 overs in india innings

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும் அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்து ராகுல் அதிரடி காட்டினார். 

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. கோலி 24, பண்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து ராகுல் 50, கார்த்திக் 1 ரன்னிலும் அவுட்டாக இந்திய அணியின் ரன் வேகம் குறைய துவங்கியது. 

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தோனி மற்றும் ஒருமுனையில் நிலைத்து நின்றார். ஆனால் அவராலும் ஆஸ்திரேலியா பந்துவீச்சை எதிர்த்து ரன் எடுக்க முடியவில்லை. இந்நிய அணி 10 முதல் 19 ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 

கடைசி இரண்டு ஓவர்களில் 11 பந்துகளை சந்தித்த தோனி மிகவும் தடுமாறினார். அவரால் 19வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரில் தோனி ஒரு சிக்சர் அடித்து அந்த ஓவரில் 7 ரன்கள் எடுத்தார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 


Advertisement