அடித்து நொறுக்கிய நியூசிலாந்து! இந்தியா டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்யாதது ஏன்?

Newzland scored 212 in 3rd t20


newzland-scored-212-in-3rd-t20

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த தொடரில் நியூசிலாந்து அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலில் பேட்டிங் செய்துள்ளது. முதல் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி 219 ரன்கள் எடுத்தது. இரண்டாவது போட்டியில் அதிர்ஷ்டவசமாக குருணல் பாண்டிய எடுத்த 3 விக்கெட்டுகளால் நியூசிலாந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

cricketஇந்நிலையில் 8 பேட்ஸ்மேன்களை கொண்ட இந்திய அணி இந்த போட்டியிலாவது முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதற்கு இந்தியா சேசிங் செய்வதில் தான் சிறந்த அணியாக உள்ளது. எனவே தான் முதலில் பீல்டிங் செய்வதாக ரோகித் சர்மா தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகள் சிக்சர்கள் பறந்தன. ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் அடித்தனர். இந்திய அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. 

cricket

துவக்க ஆட்டக்காரர்கள் சைபர்ட்(43), முன்ரோ(72) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வில்லியம்சன்(27) ஆட்டமிழக்க கடைசியில் கிராண்ட்கோம் அதிரடி காட்டி ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. 

cricket

இதே போன்ற இமாலய இலக்கை முதல் போட்டியில் துரத்தி பிடிக்க தவறிய இந்திய அணி இந்த போட்டியிலாவது வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்தியா சேசிங்கில் சிறந்த அணி என்பதை நிரூபிக்குமா.