தனி ஆளாய் மிரட்டிய பிராத்வெயிட்; கடைசியில் நியூ வீரர்கள் செய்த மரியாதை!

தனி ஆளாய் மிரட்டிய பிராத்வெயிட்; கடைசியில் நியூ வீரர்கள் செய்த மரியாதை!


Newzland praised brathwaite

உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார் காட்ரல். ஒருவழியாக வில்லியம்சன் 148 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது.

wc2019

292 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து அணியை கடைசி நிமிடம் வரை நடுநடுங்க வைத்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ப்ராத்வெயிட். 45வது ஓவரிலேயே 9 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 49 ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றார் ப்ராத்வெயிட்.

wc2019

கடைசி மூன்று ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. மேட் ஹென்றி வீசிய 48 வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி 25 ரன்கள் எடுத்தார் ப்ராத்வெயிட். அடுத்த இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 49 ஆவது ஓவரில் முதலில் 2 ரன்களை எடுத்து கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் எல்லைக்கோட்டில் நின்ற போல்ட் சிறப்பாக கேட்ச் பிடிக்க நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.


எல்லைக்கோட்டில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்த பிராத்வெயிட் மைதானத்திலேயே சோகமாக அமர்ந்து விட்டார். வெற்றியை கொண்டாடி முடித்த நியூசிலாந்து அணி வீரர்கள் ப்ராத்வெயிட்டிற்கு ஆறுதல் கூறி அவரது விடாமுயற்சியை பாராட்டினர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.