இந்தியா விளையாட்டு

இந்திய அணிக்கு சவால் விடும் நியூ. கேப்டன்; சவாலை வெல்லுமா இந்தியா?

Summary:

newziland captan villiamsen - 2nd T20 match

நாளை நடக்கும் இரண்டாவது T20 போட்டியிலும் இந்தியாவை வெல்வோம் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடியது. இத்தொடரில் இந்தியா 4-1 என்ற நிலையில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில் டி20 தொடரையாவது வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது அந்த அணி.

இதனால் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களைக் குவித்து தொடங்கியது. ஆகவே அந்த அணியின் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை பலப்படுத்த நாளை குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ் இருவரும் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவிக்கும்போது; கடந்த டி20 போட்டி சிறப்பானது இது அனைத்தையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது. நாங்களும் இந்திய அணியும் திறமைகளை பரிமாறிக்கொண்டோம். இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை எங்கள் அணி வீரர்கள் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படியே நாங்கள் வென்று முன்னேறிச் செல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement