உலகம் விளையாட்டு லைப் ஸ்டைல்

அச்சு அசல் இந்திய வீரர் பும்ரா போலவே பந்து வீசும் வெளிநாட்டு சிறுவன்..! வைரல் வீடியோ..!

Summary:

New Zealand kid bowling like bumrah video goes viral

ICC தரவரிசை பட்டியலில் உலகளவில் நம்பர் ஒன் என்ற இடத்தில் உள்ளார் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா. எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பும்ரா இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார்.

பும்ரா பந்து வீச ஓடிவருவது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தநிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அப்படியே பும்ராவை போலவே  பந்து வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அந்தச் சிறுவனின் வீடியோவை நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரீ ட்விட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.


Advertisement