உலகக்கோப்பை தோல்வியால் இளம் வீரருக்கு கேப்டன் பதவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!New Afganisthan young CAPTAIN


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2019 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்றது. இந்தநிலையில் நாளை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து இடையே நடைபெறுகிறது.

2019 உலக கோப்பை தொடரில் குல்பதீன் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது. லீக் சுற்றுப் போட்டிகளில், ஆடிய 9 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

afganisthan

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த குல்பதின் நபியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக விளையாடிய 56 ஒரு நாள் போட்டிகளில் 36 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்த குல்பதின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த ரஹ்மத் ஷா பதவியும் பறிக்கப்பட்டு, அனைத்து போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் என்ற முறையில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.