இந்தியா விளையாட்டு

மைதானத்திலையே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.. தமிழக வீரர் நடராஜன் கூறிய நெகிழ்ச்சியான சம்பவம்..

Summary:

மைதானத்தில் விராட்கோலி செய்த நெகிழ்ச்சியான செயலால் தனது கண்களில் கண்ணீர் வந்ததாக தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

மைதானத்தில் விராட்கோலி செய்த நெகிழ்ச்சியான செயலால் தனது கண்களில் கண்ணீர் வந்ததாக தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டிக்கரு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வுசெய்யப்பட்டு ஆஸ்திரேலியா சென்றார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி, இன்று நாடே கொண்டாடும் அளவிற்கு சாதித்து காட்டியுள்ளார் நடராஜன். குறிப்பாக இந்திய அணி T20 தொடரில் வெற்றிபெற நடராஜன் மிக முக்கிய பங்காற்றினார். அதேபோல் டெஸ்ட் தொடரிலும் நடராஜனின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜனுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்ற பிறகு விராட் கோலி என்னிடம் கோப்பையைக் கையில் கொடுத்தார். அந்த தருணம் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் டி20 தொடரை வென்றவுடன் ஹர்திக் பாண்டியா, நடராஜனிடம் ஆட்ட நாயகன் விருதைப் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement