இது மறக்க முடியாத ஒன்று.! மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் மாங்கனி தேசம் என்று அழைக்கப்படும் சேலத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் சிறப்பாக ஆடி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இதனையடுத்து T20 முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன். இரண்டாவது டி20 போட்டியில், சிறப்பாக பந்து வீசி நடராஜன் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
First series win for my country 💙
— Natarajan (@Natarajan_91) December 7, 2020
Meorable and special ☺️ #TeamIndia pic.twitter.com/18YBdW43cd
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும் முதல் T20 போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆடிய விதம் பலரையும் கவர்ந்து உள்ளது. இந்திய அணியில் ஒருநாள் மற்றும் T20யில் அறிமுக போட்டியிலேயே எதிரணியினரை திணறடிக்க செய்தார். இந்த நிலையில் தன்னுடைய முதல் டி20 தொடர் குறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் நாட்டிற்காக முதல் தொடர் வெற்றி. இது மறக்கமுடியாதது; ஸ்பெஷலானது" எனப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.