இந்தியா விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன்.? வெளியான முக்கிய தகவல்.!

Summary:

கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகி உள்ள நிலையில் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிர்க்கு காயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் உமேஷ் யாதவ் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்.

காயத்தால் உமேஷ் யாதவ் நாடு திரும்புகிறார் - ‌ஷர்துல் தாகூர், நடராஜன் அணியில் சேர்ப்பு

உமேஷ் யாதவுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உமேஷ் யாதவுக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூரை களமிறக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Advertisement