இன்றைய போட்டியிலும் முக்கிய வீரரை தட்டி தூக்கிய நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்.!

இன்றைய போட்டியிலும் முக்கிய வீரரை தட்டி தூக்கிய நம்ம சின்னப்பம்பட்டி நடராஜன்.!


nadarajan got first wicket in second T20 match

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதனையடுத்து  இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 

கான்பெரேராவில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

natarajan

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக மேத்யூ வேட், டார்சி ஷார்ட் இருவரும் களமிறங்கினர். ஆரம்பத்திலே மேத்யூ வேட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டார்சி ஷார்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து அதிரடியாக ஆடிய 58 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். தற்போதுவரை 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்தநிலையில் ஆடிவருகிறது. 

தனது சர்வதேச அறிமுக போட்டியான இந்த தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில்  2 விக்கெட்டுகளையும், முதலாவது T20 போட்டியில் 3 விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தி அசத்தி இருந்தார். இந்தநிலையில் இன்று நடக்கும் இரண்டாவது  T20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டார்சி ஷார்ட்டை தட்டி தூக்கி இன்றைய போட்டியின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.