BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தலை எங்கே...? தோப்பில் கிடந்த சடலம்.!! காவல் துறை தீவிர விசாரணை.!!
திண்டுக்கல் அருகே தென்னந்தோப்பில் தலையில்லாத இளைஞரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரையடுத்த பழையவக்கம்பட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் தலையில்லாத சடலம் கிடப்பதாக திண்டுக்கல் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபர் யார்.? என்பது குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த நபர் மிக்கேல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்.? அவரை கொலை செய்தவர்கள் யார்.? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தலையையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. தடையவியல் நிபுணர்கள் அப்பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!
தென்னந்தோப்பில் தலையில்லாத சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!