சென்னை அணிக்கு பீதி கிளப்பும் மும்பையின் சேப்பாக் சென்டிமென்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Mumbai won more matches against to chennai


mumbai-won-more-matches-against-to-chennai

ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று சென்னையின் சொந்த மண்ணில் இரவு 7 . 30 மணிக்கு மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி ஹைதராபாத்தில் வரும் 12ம் தேதி  நடக்க உள்ள இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும்.

IPL 2019

இந்த சீசனில் மும்பை, சென்னை இடையே நடந்த இரண்டு போட்டியிலும் மும்பை அணியே வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாது காடந்த சீசனிலும் சென்னை அணி மும்பை அணியிடம் தொடர்ந்து தோல்வியையே சந்தித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 2013 முதல் சேப்பாக்கத்தில் அந்த அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதில் 3 போட்டிகள் மும்பைக்கு எதிரானவை. இதனால் இன்றைய போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறுவது சவாலாக அமைந்துள்ளது.