5-வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்.! நேற்றைய ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்.!

5-வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்.! நேற்றைய ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்.!



mumbai indians won the cup

13-வது ஐ.பி.எல். சீசனின் இறுதி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணியின் துவக்க வீரர்களாக ஸ்டோனிஸ் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். 

ஸ்டோனிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறக்கிய ரஹானே 4 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷிகர் தவானும் 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் டெல்லி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.

Mumbai indians

சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 35 பந்துகளில் 56 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 50 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி. ஆரம்பத்திலிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடியது. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக டி காக் 12 பந்துகளில் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். ஆனால் மும்பை அணி 18.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று மும்பை அணி  5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. நேற்றைய வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.