விளையாட்டு

இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கம்.. வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய மும்பை இந்தியன்ஸ்!

Summary:

இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்ட ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் உள்ளார் என தெரிவிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. மூன்று விதமான பட்டியிலிலும் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ மருத்துவ குழு கண்கானித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காயத்தை காரணம் காட்டி தான் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை என மறைமுகமாக பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

ஆனால் நேற்று இரவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோவில் ரோகித் சர்மா வழக்கம்போல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அவருக்கு லேசான காயம் தான் இப்போது ரோகித் சர்மா தயாராகிவிட்டார் என மும்பை இந்தியன்ஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாததற்கு என்ன காரணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கவிருக்கும் தொடரில் உத்தேச அணியில் கூட ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கும் கோலிக்கும் விரிசல் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.Advertisement