டி20 தொடரில் காயத்தால் விலகிய பும்ரா; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முகமது சிராஜ்...!

டி20 தொடரில் காயத்தால் விலகிய பும்ரா; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முகமது சிராஜ்...!


muhammad siraj replaces bumrah

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக். 16 முதல் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி அக்.2-ல் கவுகாத்தியிலும், இந்தூரில் அக்.4-ல் நடைபெறவுள்ளது. 

இதனால் பிற போட்டிகளில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஷாபாஸ் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.