இந்தியா விளையாட்டு WC2019

மீண்டும் அதே கிளவுஸை அணிந்துவருகிறாரா தோனி? சர்ச்சை குறித்து ரோஹித் சர்மாவின் பதில்!

Summary:

MS Dhoni will change glouse

2019 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா உடனான முதல் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் போது தோனி தன்னுடைய கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் கிளவுஸில் இருக்கும் பலிதான் முத்திரையை அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தோனி கையுறையில் இருக்கும் முத்திரைக்கும் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று பிசிசிஐ தெரிவித்த பின்பும் அந்த விளக்கத்தை ஏற்க ஐசிசி தயாராக இல்லை. தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஐ.சி.சி நிராகரித்தது.

மேலும் தோனியின் கிளவுஸில் இருந்த அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதை பி.சி.சி.ஐ-யும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், இந்த சர்ச்சை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது பற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

தோனி கிளவுஸில் உள்ள முத்திரையை நீக்குவாரா, இல்லையா என்பது ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் போட்டியின்போது தெரிந்துவிடும்’ என தெரிவித்துள்ளார். ஐ.சி.சி-யின் வேண்டுகோளின்படி இன்றைய போட்டியில் தோனி புதிய கிளவுஸை அணிந்து விளையாடுவார் என கூறப்படுகிறது.


Advertisement