விளையாட்டு

லீக் சுற்றோடு வெளியேறும் சிஎஸ்கே அணி.! தோனியின் மனைவி சாக்‌ஷி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

இது ஒரு விளையாட்டு! சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோற்கிறார்கள், மற்றவர்கள் தவற விடுகிறார்கள் என தோனியின் மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில் இன்னும் இரு போட்டிகளில் சம்பிரதாய ஆட்டமாகவே சென்னை அணி விளையாட உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டியின் 44வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தகுதியில்லை என்பதால் ரசிகர்கள் சோகமடைந்தனர் இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram

💛

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

அந்த பதிவில், இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வென்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வியடைகிறார்கள், மற்றவர்கள் தவற விடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு, விளையாட்டுத்திறனின் சாரத்தை வெல்லாமல் உணர்ச்சிகளை அனுமதிக்கவும். ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது, அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement