இந்தியா விளையாட்டு

தல தோனிக்கு வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தோனியின் மனைவி சாக்‌ஷி!

Summary:

ms Dhoni wife birthday wish to Dhoni

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நேற்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடினார். இளம் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். ஆரம்பத்திலேயே வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்தவர். பின்னர் அவரின் அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

ஹெலிகாப்டர் ஷாட், விக்கெட் கீப்பிங் செய்வதில் தோனியை மிஞ்சுவதற்கு ஆளில்லை. தோனி கீப்பர் நிற்கிறார் என்றாலே பேட்ஸ்மேன்களுக்கு சற்று பயமாக தான் இருக்கும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ‘கேப்டன் கூல்’ என ரசிகர்களால் எப்போதும் அழைக்கப்படுபவர் தல தோனி. 

தோனி பிறந்த நாளை, ஹேஸ்டேக் போட்டே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். இந்தநிலையில் தோனி அவரது பண்ணை வீட்டில், தனது 39வது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினருடன் மிக எளிமையாக கொண்டாடி இருக்கிறார். இந்தநிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள வித்தியாசமான வாழ்த்து செய்தியில், ‘மேலும் ஓராண்டு உங்களுக்கு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால் அழகாகவும், இனிமையானவராகவும் மாறிவிட்டீர்கள். அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது. மெழுகுவர்த்தி பற்ற வைத்து, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவோம். வாழ்த்துகள் கணவரே என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement