தோனி அவுட்டா இல்லையா? ஒருவழியாக முடிவு கிடைத்தது!

தோனி அவுட்டா இல்லையா? ஒருவழியாக முடிவு கிடைத்தது!



ms Dhoni run out result


இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச்செல்ல தோனி 49-வது ஓவரில் போராடிக் கொண்டிருந்த போது ரன் அவுட் ஆனார்.

ஆனால் அந்த ரன் அவுட்டின் போது, பீல்டர்கள் 6 பேர் வெளியே இருந்ததாகவும், இதனால் அது நோ பாலாக இருந்திருந்தால், தோனி ஓடியிருக்கமாட்டார் எனவும் ரசிகர்கள் இணையத்தில் கூறி வந்தநிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

MS Dhoni

இந்நிலையில் அது தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அந்த நேரத்தில் பீல்டர்களின் கிராபிக்ஸ் ஒளிபரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது போட்டியின் 49-வது ஓவரின் முதல் பந்தை பெர்குசன் வீசிய போது, அவுட் சைடு பீல்டிங் ஐந்து பேர் இருந்துள்ளனர். அந்த பந்தில் தோனி சிகஸ்ர் அடித்தார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை வீசும் போது, பீல்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பீல்டிங்கில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த பீல்டிங் செட்டிங்கை வைத்து அந்த கிராபிக் பீல்டர் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த பந்து சரியான பந்து தான் என்பது தெரியவந்துள்ளது.