இந்தியா விளையாட்டு WC2019

நேற்றைய ஆட்டத்தில் சையிலண்டாக புதிய உலக சாதனை படைத்த தல தோனி!

Summary:

MS Dhoni NEw Reocord


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டறில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. 

நேற்றைய ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டி தல தோனிக்கு 350வது போட்டியாகும். நேற்றைய போட்டியின்மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் தல தோனி. 

ms dhoni க்கான பட முடிவு

இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒரு விக்கெட் கீப்பராக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் எனும் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மேலும், 350 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.


Advertisement