புது கேர் ஸ்டெயில்..! கம்பீர தோற்றம்..! ஆளே மாறிப்போன தோனி.! வைரல் வீடியோ..!



MS Dhoni gets heros welcome in Chennai ahead of IPL 2020

கடந்த வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத தோனி இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தோனி இன்று சென்னை வந்துள்ளார். மார்ச் 3-4 தேதிகள் முதல் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் தோனி.

புது கேர் ஸ்டெயில், கம்பீர தோற்றம் என ஆளே மாறிபோயுள்ளார் தோனி. விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்திறங்கிய தோனியை சென்னை அணி நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.