தோனிக்கு ஒரு ஞாயம், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரு ஞாயமா? கடுப்பாகும் தோனியின் ரசிகர்கள்!!

MS Dhoni fans getting angry


MS Dhoni fans getting angry


2019 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா உடனான முதல் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த க்ளவுஸில் இருக்கும் ராணுவ முத்திரையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியின் போது தோனி தன்னுடைய கீப்பிங் கிளவுஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் 'பாலிதான்' என்ற முத்திரையை பதித்து உபயோகித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் கிளவுஸில் இருக்கும் பலிதான் முத்திரையை அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தோனி கையுறையில் இருக்கும் முத்திரைக்கும் ராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று பிசிசிஐ தெரிவித்த பின்பும் அந்த விளக்கத்தை ஏற்க ஐசிசி தயாராக இல்லை.

MS Dhoni

ஐசிசி விதிமுறையின்படி, வீரர்கள் வர்த்தகரீதியான, மதம், ராணுவம் தொடர்பான அடையாளங்களை அணியக்கூடாது என்பது தான் விதிமுறை. ஆனால், தோனி க்ளவுஸில் இருக்கும் முத்திரை வர்த்தக ரீதியாகவோ, அல்லது மதரீதியாகவோ இருக்கும் அடையாளம் அல்ல. எனவே இதுதொடர்பாக ஐசிசியிடம் அனுமதி கோரி பேசி வருகிறோம் என உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

MS Dhoni

இதனால் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ICC விதிமுறைகள் படி மத ரீதியலான செயல்பாடுகள் கூடாது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்துகுள்ளேயே தொழுகையில் ஈடுபடுகிறார்கள். இதனை கண்டுகொள்ளாமல் தோனியின் கீப்பிங் கிளவ்ஸ்-ல் இருந்த ராணுவ வீரர்களில் தியாத்தை போற்றும் அடையாள குறியை நீக்க சொல்வது ஞாயமா என கேள்வி எழுப்புகின்றனர்.