உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய வீரர்! கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய வீரர்! கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!



mohammed-shazhad-ruled-out-of-wc

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஷாசாத்தை ஆப்கன் அணி அதிரடியாக நீக்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். உலக்கோப்பைக்கான தகுதி போட்டியில் ஆடி கடைசி அணியாக இந்த தொடரில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான் அணி.

wc2019

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க ஆட்டக்காரராக நீண்ட நாட்களாக ஆடி வரும் முகமது ஷாசாத் இந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். 84 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள இவர் அடித்த 2727 ரன்கள் தான் சர்வதேச அளவில் ஒரு ஆப்கான் வீரர் அடித்துள்ள அதிக ரன்கள்.

உலககோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது ஷாசாத்திற்கு முழங்காலில் அடிபட்டதால் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் காயம் சரியாகவே அடுத்த பயிற்சி ஆட்டத்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் களமிறங்கினார்.

wc2019

அந்த இரண்டு போட்டிகளிலுமே 0, 7 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட இவரை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் திடீரென உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கிவிட்டு இக்ராம் அலி கில என்ற 18 வயது வீரரை அணியில் புதிதாக சேர்த்துள்ளது.

உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட முகமது ஷாசாத் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "எனக்கு ஏற்பட்ட காயம் முழுவதும் குணமடைந்துவிட்டது. நான் முழு உடல்தகுதியுடன் இருந்தும் என்னிடம் எதைப் பற்றியும் ஆலோசிக்காமல் அணியிலிருந்து நீக்கிவிட்டனர்" என மிகுந்த கவலையுடன் 32 வயதான ஷாசாத் தெரிவித்துள்ளார்.