தோனிக்கு முன்பே ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ள இந்திய அணி வீரர்.! யார் தெரியுமா.? வைரல் வீடியோ.!

தோனிக்கு முன்பே ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ள இந்திய அணி வீரர்.! யார் தெரியுமா.? வைரல் வீடியோ.!


mohammad azharuddin helicopter shot video

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு தல தோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தல தோனிக்கென்றே தனி அடையாளம் என்றால், அது அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் என்றே கூறலாம். தோனி  விளையாடும் அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஒன்று.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தோனி போலவே ஹெலிகாப்டர் ஷாட் அடித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1996-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இப்படி அடித்துள்ளார்.

அப்போட்டியில் முகமது அசாருதீன், 77 பந்துகளில் 109 ரன்கள் (18 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அப்போட்டியில் முகமது அசாருதீன் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.