விராட் கோலியின் தரமான கேப்டன்ஸி.! நேற்றைய ஆட்டத்தில் சாதனை படைத்த முகமது சிராஜ்!

விராட் கோலியின் தரமான கேப்டன்ஸி.! நேற்றைய ஆட்டத்தில் சாதனை படைத்த முகமது சிராஜ்!


mohamed siraj new record

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற 39வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதனையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் திரிபாதி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை கிறிஸ் மாரீஸ் வீசினார். இரண்டாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் அல்லது நவ்தீப் சைனிக்கு விராட் கோலி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், சிராஜை பந்துவீச விராட் கோலி அழைத்தார்.

mohamed siraj

சிராஜ் வீசிய சிறப்பான பந்துவீச்சால் திரிபாதி தடுமாறினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அதிரிபாதி அவுட் ஆனார். மேலும் சிராஜ் சிறப்பாக வீசிய அடுத்த பந்தில் ராணா போல்டானார். மேலும் அவர் வீசிய அந்த ஓவரும் மெய்டன் ஓவராகவும் அமைந்தது. இதற்கு அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். அந்த ஓவரும் மெய்டன் ஓவரானது. 

ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து மெய்டன் ஓவராக பந்துவீசிய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார். இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.