விளையாட்டு

மும்பை vs கைதராபாத்! கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு! வெற்றியை தீர்மானித்த சூப்பர் ஓவர்!

Summary:

MI vs SRH match 51 mi won by super over

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மும்பை மற்றும் கைதராபாத் அணிகள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மும்பை மற்றும் கைதராபாத் அணிகள் இடையேயான போட்டி மும்பியில் இன்று நடைபெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 05 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. டீகாக் அதிரடியாக விளையாடி 69 ரன் எடுத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கைதராபாத் அணி நிதானமாக விளையாடி வெற்றியின் அருகில் சென்றது. கைதராபாத் அணி சார்பாக மனிஷ் பாண்டே 71 ரன் எடுத்தார்.

கடைசி 6 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார் மனிஷ் பாண்டே. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டை இழந்து 8 ரன் எடுத்தது.

9 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி மூன்று பந்துகளில் 9 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

 


Advertisement