இந்தியா விளையாட்டு

என்னை யாரும் ஏலத்தில் எடுக்க வேண்டாம்.! ஏலத்திலிருந்து விலகிய சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்.!

Summary:

ஐபிஎல் ஏலத்திலிருந்து இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள், 124 வெளி நாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த ஏலத்தில் தான் பங்கேற்க விரும்பவில்லை, தனது பெயரை நீக்கிவிடுங்கள் என இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். 

நேற்று மாலைதான் மார்க் வுட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மார்க் வுட் இங்கிலாந்து அணியை சேர்ந்த மூத்த வீரர் ஆவார். இவர் 2018ல் சிஎஸ்கே அணியில் ஆடினார் . ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

நல்ல பவுலராக இவர் இருந்தாலும் இவருக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பெரும்பாலும் இவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் இந்த வருட சீசனில் அவர் கலந்துகொள்ளவில்லை. தனக்கு வயதாகிவிட்டதால் ஐபிஎல்லில் விளையாட விருப்பம் இல்லை, இங்கிலாந்து அணிக்கான ஆட்டத்தில் கவனம் செலுத்த போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement