கே.எல்.ராகுலை போல்டாக்கி தெறிக்கவிட்ட மார்க் வுட்.! அதற்க்கு தக்க பதிலடி கொடுத்த விராட் கோலி.!வைரல் வீடியோ.!

கே.எல்.ராகுலை போல்டாக்கி தெறிக்கவிட்ட மார்க் வுட்.! அதற்க்கு தக்க பதிலடி கொடுத்த விராட் கோலி.!வைரல் வீடியோ.!


Mark Wood got KL rahul wicket

கே.எல்.ராகுலின் விக்கெட்டை, இங்கிலாந்து அணியின் மார்க் வுட் போல்டாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆனார். கடந்த இரண்டு போராட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ராகுல், நேற்றைய போட்டியில் மார்க் அவுட் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய விராட்  பழிதீர்க்கும் வகையில் மார்க் அவுட் வீசிய பந்தில் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவரது ஓவரில்  6,6,4 என அடித்த பிறகும் அவரது கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாததால் ஆக்ரோஷத்தில் கத்தினார். அதில் தெரிந்தது விராட்கோலியின் கோவம். ஆனாலும் இந்திய அணி நூலிழையில் வெற்றியை இழந்தது.