இந்தியா விளையாட்டு

பாக்கிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பறந்து சென்று கேட்ச் பிடிக்கும் காட்சி!. வைரலாகும் வீடியோ!.

Summary:

பாக்கிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பறந்து சென்று கேட்ச் பிடிக்கும் காட்சி!. வைரலாகும் வீடியோ!.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று இந்திய அணி அபாரமாக  வென்றது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஹாங்காங், ஆப்கனிஸ்தான் போன்ற ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்தியா வென்றது. 

நேற்று நடந்த ஆட்டத்தில்  கேதர் ஜாதவ் பந்து வீசினார். அப்போது, அவர் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தை பாகிஸ்தான் அணி தலைவர் அகமது எதிர்கொண்டார். பந்தை சிக்சர் எல்லைக்கு தூக்கி அடித்தார். அப்போது பீல்டிங்  செய்துகொண்டிருந்த வீரர் மணீஷ் பாண்டே, பந்தை பிடித்தார்.

அவர் அடித்த பந்து பவுண்டரி எல்லையை தாண்டிய நிலையில் அப்போது மணீஷ் பாண்டே பறந்து சென்று  பந்தை மைதானத்திற்கு வெளியே சென்று மீண்டும் மைதானத்திற்குள் வந்து பந்தை பிடித்து அசத்தினார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Advertisement