விளையாட்டு

இந்திய அணியின் தோல்விக்கு காரணமான அந்த மூன்று முக்கிய தவறுகள்..! புலம்பும் ரசிகர்கள்.!

Summary:

Major mistakes of indian team lost to new zealand

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை அடுத்து ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 347 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தனர். இந்தியா எப்படியும் வெற்றிபெற்றுவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் பீல்டிங்கில் இந்திய அணி வீரர்கள் சொதப்பியதால் 48.1 முடிவில் 348 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.


குறிப்பாக, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா 10 ஓவர்களில் 13 அகல பந்துகளை வீசியுள்ளார். மேலும், நியூசிலாந்து வீரர் டைலரின் அதிரடி ஆட்டம்தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்றாலும் டைலர் அடித்த இரண்டு கேட்சுகளை குல்தீப் மற்றும் ராகுல் தவறவிட்டது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

மேலும் ஒரே ஓவரில் Shardul Thakur 22 ரன்கள் கொடுத்தது நியூசிலாந்து அணிக்கு கூடுதல் பலமாக மாறியது. இதுபோன்ற சிறு சிறு தவறுகளால் எளிதாக வெற்றிபெறவேண்டிய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


Advertisement