இந்திய அணியை திக்குமுக்காடவைத்த கைல் ஜேமிசன்.! வெற்றிக்கு பின் சொன்ன வார்த்தை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

இந்திய அணியை திக்குமுக்காடவைத்த கைல் ஜேமிசன்.! வெற்றிக்கு பின் சொன்ன வார்த்தை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!


kyle-jamieson-talk-about-wtc21

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் திகழ்ந்தார்.

இந்த போட்டியில், கைல் ஜேமிசன் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், இந்த போட்டியில் மொத்த 7 விக்கெட் வீழ்த்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கைல் ஜேமிசன், இது போன்ற மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டியில், அதுவும் இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்கிறேன். 

kyle jamieson

நீல் வாக்னர், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தபோதிலும், இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக ஆரம்ப ஓவர்களை வீச எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பது, எனக்கு கிடைத்த சிறப்பம்சமாக நான் கருதுகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் அவர்களுக்கு பின்னாலேயே பயணிக்க விரும்புகிறேன் என்று அடக்கத்துடன் கூறினார். கைல் ஜேமிசன் இப்படி அடக்கத்துடன் கூறியதை, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.