கடைசி பந்துவரை BP எகிறிடிச்சு!! அடி ஒன்னும் இடி மாதிரி இருந்துச்சு!! இமாலய இலக்கை போராடி தோற்றுப்போன ராஜஸ்தான் அணி..

கடைசி பந்துவரை BP எகிறிடிச்சு!! அடி ஒன்னும் இடி மாதிரி இருந்துச்சு!! இமாலய இலக்கை போராடி தோற்றுப்போன ராஜஸ்தான் அணி..



KXIP vs RR match update

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

ஐபில் சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பாக, அணியின் கேப்டன் KL ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

தீபக் கூடா 28 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என மொத்தம் 64 ரன்கள் அடித்தார். கிரிஸ் கெய்ல் தனது பங்கிற்கு 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் அடித்தது.

ipl t20

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் Manan Vohra இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி பந்து வரை விளையாடி அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச்சென்றார்.

63 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர் என மொத்தம் 119 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்தார் சஞ்சு சாம்சன். இதன்மூலம் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கடைசி பந்துவரை ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்தில் வைத்திருந்த இந்த போட்டி ஐபில் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்து என்றே கூறலாம். இறுதியில் சிறந்த ஆட்ட நாயகனாக ராஜாஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.