ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசிய கிருஷ்ணா பாண்டே.! கதறிய பந்துவீச்சாளர்.! வைரல் வீடியோ

ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசிய கிருஷ்ணா பாண்டே.! கதறிய பந்துவீச்சாளர்.! வைரல் வீடியோ


krishna pandey sixers

பாண்டிச்சேரியின் துத்திப்பட்டு பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில்  பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் டி10 கிரிக்கெட் தொடர் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. வரும் ஜூன் 8-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் ராயல்ஸ், பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணியில் ரகுபதி 30 பந்துகளில் 84 ரன்களை எடுத்தார். இறுதியில் அந்த அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அப்போது களத்திற்குள் வந்த கிருஷ்ணா பாண்டே 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். 19 பந்துகளில் 83 ரன்களை குவித்தார். ஆனாலும், பேட்ரியாட்ஸ் அணி இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிருஷ்ணா பாண்டே 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.